Wednesday, December 24, 2014

பாகஸ்த்தர்களின் பட்டியல்

அல்லாஹ்வின் திருபெயரால்      ....

முன் தலைப்பில் கூறப்பட்டுள்ள வசனங்களின் அடிப்படையில் பாகங்கள் 1/2 1/4 1/8 2/3 1/3 1/6 என்று ஆறு பிரிவுகளாக பிரிக்கப்படுள்ளன . அவற்றை பெறக்கூடிய வாரிசுகளும் பிரிவினர்களாக இருக்கின்றனர் . அவற்றை விரிவாகப்பார்ப்போம்.


1..2ல் ஒன்று பெறக்கூடியவர்கள் ஐந்து நபர்களாகும் .

1. கணவன் .. குழந்தைகள் இல்லாதநிலையில் மனைவி காலமாகிவிட்டாள் அவளுடைய சொத்தில் சரிபாதி கிடைக்கும்.

2. மகள்.. இறந்தவருக்கு ஒரே மகள் மட்டும் இருந்தால் , அவனுக்கு 2ல் ஒன்று கிடைக்கும்.

3. மகனின் மகன் .. இறந்தவருக்கு பிள்ளைகளோ வேறு பேரன் பேத்திகளோ இல்லையானால் 2ல் ஒன்று கிடைக்கும்.

4. தாய் தந்தை வழி சகோதரி.. இறந்தவருக்கு வேறு எந்த வாரிசுமில்லாமல் அவள் மட்டுமிருந்தால் 2ல் ஒன்று கிடைக்கும் .

5.தந்தை வழி சகோதரி.. இறந்தவருக்கு நம்பர் 4ல் கூறப்பட்ட சகோதரியோ வேறு வாரிசுகளோ இல்லையானால் அவளுக்கு 2ல் ஒன்று கிடைக்கும்.

2-4ல் ஒன்று பெறக்கூடியவர்கள் 2 நபர்களாகும் .

1. கணவன்.. குழந்தைகள் இருக்கும் நிலையில் மனைவி காலமாகிவிட்டாள் அவருக்கு 4-ல் ஒன்று கிடைக்கும்.

2. மனைவி.. குழந்தைகள் இல்லாத நிலையில் கணவன் காலமாகிவிட்டால்  அவளுக்கு 4ல் ஒன்று கிடைக்கும்.

3. எட்டில் ஒன்று பெறக்கூடியவர்கள் ஒரே நபராகும்.

1. மனைவி .. குழந்தைகள் இருக்கும் நிலையில் கணவன் காலமாகிவிட்டால்  மனைவிக்கு 8ல் ஒன்று கிடைக்கும்.

4-3ல் இரண்டு பெறக்கூடியவர்கள் நான்கு நபர்களாகும் .

1. பெண் பிள்ளைகள்.. இறந்தவருக்கு ஆண் வாரிசில்லாமல் இரண்டோ அதற்கு மேற்பட்ட பெண் பிள்ளைகளோ இருந்தால் , அவர்களுக்கு 3ல் இரண்டு பாகம் கிடைக்கும்,, அவர்கள் அதனை பகிர்ந்து கொள்ள வேண்டும்.

2. மகன் வழிப்பேத்தி .. இறந்தவருக்கு ஆண் , பெண் மக்கள் இல்லாமல் மகன் வழி  - பேத்திகள் மட்டும் இரண்டோ அதை விட அதிகமோ இருந்தால் அவர்களுக்கு 3ல் இரண்டு பாகம் கிடைக்கும்.

3. தாய் தந்தை வழி சகோதரிகள்.. இறந்தவருக்கு தந்தை, மகன் மகள் , மகனின்  மகள் , தாய் தந்தை வழி  சகோதரரர்கள் போன்ற வாரிசுதாரர்கள் இல்லாத நிலையில் அச் சகோதரிகளுக்கு 3ல் இரண்டு பாகம் கிடைக்கும்.

4. தந்தை வழி சகோதரிகள் .. இறந்தவருக்கு நம்பர் 2.3ல் கூறப்பட்டுள்ள நபர்களோ மற்ற வாரிசுகளோ இல்லாத நிலையில் அச் சகோதரிகளுக்கு  3ல் இரண்டு பாகம் கிடைக்கும்.

5. சொத்தில் 3ல் ஒரு பாகம் பெரும் நபர்கள் இரண்டு நபர்களாகும் .

1- தாய்.. இறந்தவருக்கு பிள்ளைகளோ , மகனின் பிள்ளைகளோ , சகோதர சகோதரிகளில் இருவர்கள்  அதற்கு அதிகமானவர்களோ இல்லையானால் தாய்க்கு 3ல் ஒன்று கிடைக்கும்.

2- தாய் வழி சகோதர சகோதரிகள்..  இறந்தவருக்கு பிள்ளைகள், மகன் வழிபிள்ளைகள்  , தகப்பன் , பாட்டன் போன்ற வாரிசுகள் இல்லாத நிலையில் அச்சகோதரிகள்  இருவரோ அதற்கு அதிகமோ இருந்தால் அவர்களுக்கு 3ல் ஒன்று கிடைக்கும்.

6-6 ஒன்று பெறுபவர்கள் 8 நபர்கள் ஆகும் .

1- தந்தை.. இறந்தவருக்கு பிள்ளைகளோ பேரப்பிள்ளைகளோ இருந்தால் , அவருடைய சொத்தில் தந்தைக்கு 8ல் ஒன்று கிடைக்கும் .
2- பாட்டன்.. இறந்தவருக்கு பிள்ளைகளோ, மகனின் பிள்ளைகளோ இருந்து தகப்பன் இல்லையானால் பாட்டனாருக்கு 6ல் ஒன்று கிடைக்கும்.

3- தாய். இறந்தவருக்கு குழந்தைகள் மகனின் குழந்தைகள் , சகோதர சகோதரிகள் இருவரோ பலரோ இருக்கும் நிலையில் தாய்க்கு 6ல் ஒன்று கிடைக்கும்.
4-மகனின் மகள் .. இறந்தவருக்கு ஒரு மகள் மட்டும் இருந்தும் மகனின் மகளுடன் ஆண்  இல்லாத நிலையில் அவளுக்கு 6ல் ஒன்று கிடைக்கும் .

5-தகப்பன் வழி சகோதரி.. இறந்தவருக்கு சகோதரி இல்லாமல், தாய் தந்தை வழி  சகோதரி ஒருத்தியிருந்து அவளுடன் ஆண் இல்லாத நிலையில் அச்சகோதரிக்கு 6ல் ஒன்று கிடைக்கும்.

தாய் வழி சகோதரன் , சகோதரி.. இறந்தவருக்கு பிள்ளைகளோ , மகனின் பிள்ளைகளோ, தந்தையோ, பாட்டனோ, இல்லாமலிருந்து , அந்த சகோதரன் ஒருவனோ அல்லது ஒருத்தியோ  இருந்தால் 6ல் ஒன்று கிடைக்கும்.

8- பாட்டி  [தாய், தந்தை வழிப் பாட்டிகள் ] தாய் இல்லாவிட்டால் தாயின் தாயும் , தந்தை இல்லாவிட்டால் தந்தையின் தாயும் வாரிசாவார்கள் .

மேல் குறிப்பிடப்பட்டுள்ள பாக்க விகிதாச்சாரங்கள் அதில் குறிப்பிட்டுள்ள வாரிசுதாரர்கள்  இருக்கும்போது மட்டுமே உள்ள சட்டங்களாகும். மாறாக வாரிசுதாரர்கள் கூடுதல் குறைதல் மாறுதல் ஆகும்போது  அந்த விகிதாச்சாரங்க லும் மாறுதல் அடையும் என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய  முக்கியமான விஷயங்களாகும்.
இன்ஷாஅல்லாஹ்  இன்னும் தொடரும்
அடுத்த தலைப்பு ... பெற்றோர்களின் சொத்துக்கள்
அல்லாஹ் மிக்க அறிந்தவன்.  

No comments:

Post a Comment