Sunday, June 8, 2014

வளர்ப்பு மகனுக்கு சொத்துரிமை இல்லாததேன்?

அல்லாஹ்வின் திருபெயரால் ...............
எல்லாப் புகழும் புகழ்ச்சியும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாக!

வளர்ப்பு மகனுக்கு சொத்துரிமை இல்லாததேன்?

இஸ்லாத்தில் வளர்ப்பு மகனுக்கு சொத்துரிமை இல்லை என்று கூறப்படுகிறதே அது ஏன்  என்று சிலர் குழப்பமடைகின்றனர் . இவர்கள் இஸ்லாத்தில் வாரிசுரிமை சட்டம் எந்த அடிப்படையை கொண்டுள்ளது என்பதை புரிந்து கொள்வார்களானால் குழப்பம் தீர்ந்து விடும்.


வாரிசுரிமை சட்டம் என்பது இரத்த சம்பந்தத்தையும், நெருக்கமான உறவையும் அடிப்படையாக கொண்டதாகும் என்பதை முதலில் புரிந்துக் கொள்ள வேண்டும். அடுத்து இஸ்லாத்தில் வளர்ப்பு மகனுக்கு வளர்ப்பவர்களுக்கும் உள்ள தொடர்பு எத்தகையது என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும்.

வளர்ப்பு மகனை தமது பிள்ளைகளோடு ஒருவராகவே வைத்திருக்கலாம் அவரின் மீது அன்பையும் பாசத்தையும் பொழிந்தும் வளர்த்திருக்கலாம் அந்த மகனும் அவர்களை சொந்த பெற்றோர்களாக மதித்திருக்கலாம் இவைகளெல்லாம் அவர்களின் மனோ நிலையையும் பழக்க வழக்கத்தையும் , நாட்டு நடப்பையும் சார்ந்த விஷயங்கள் என்று தான் கூற முடியும் தவிர சட்டப்படி இரத்த சம்பந்தம் உடையவர் என்றோ , நெருக்கமான உறவினர் என்றோ கூற முடியாது  அதே போன்று வளர்த்தவர்களை பராமரிக்கும் பொறுப்போ, கடமையோ சட்டப்படி வளர்ப்பு மகனின் மீது கிடையாது  ஆனால் அவர்களை பெற்றோர்கலாகவே மதிப்பதும், பராமரிப்பதும் நடைமுறையின் அடிப்படையில் அவர்களின் மீது கடமையாகும்.

எனவே, தொடர்புகளை மையமாக வைத்தே வளர்ப்பு மகனுக்கு சட்டப்படி சொத்துரிமை இல்லை என இஸ்லாம் கூறுகிறது. ஆனால், வளர்த்தவர்கள் அவர்களின் ஜீவிய காலத்திலேயே வளர்ப்பு மகனுக்கு அவர்கள் எதையும் கொடுக்கலாம்  அதற்கு எந்த தடையுமில்லை.

பாட்டன் சொத்து பேரனுக்கு சொந்தமா?

பாட்டன் சொத்து பேரனுக்கு சொந்தம் என்று ஒரு சொல் பொதுவாக மக்களிடையே பேசப்படுகிறது, அந்த சொல் எங்கிருந்து எப்படி நம்மிடம் வந்தது என்பது நமக்குத் தெரியாது. ஆனால், இஸ்லாமிய சட்டப்படி அப்படி ஒன்றும் கிடையாது. அப்படி சொல்வது தவறாகும் அது பிறமத சட்டமாகும்.

ஒருவர் மரணமாகிவிட்டால் அவருடைய சொத்து அவருடைய மகனுக்கு தான் சொந்தமாகும். அவர் அதை தன் விருப்பப்படி எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். யாருக்கும் வேண்டுமானாலும் கொடுக்கலாம்.

எனவே, அவருடைய பிள்ளைகள் வாப்பா! இது எங்கள் பாட்டன் சொத்து இது எங்களுக்கு வந்து சேர வேண்டிய சொத்தாகும்,, அதை நீங்கள் உங்கள் இஷ்டத்துக்கு செலவு செய்யவோ , யாருக்கும் கொடுக்கவோ கூடாது என்று தடை செய்யவோ அல்லது  எங்களிடம் கொடுத்து விடுங்கள் என்று கேட்கவோ முடியாது.

அவர்  அதை ஆண்டு அனுபவித்து எதை விட்டுச் செல்கின்றாரோ அதுதான் அவருடைய பிள்ளைகளுக்கு [அந்த பேரபிள்ளைகளுக்கு] வந்து சேரும் அவ்வளவுதான், இதில் இது பாட்டனாருடைய சொத்து இது வாப்பா சுயமாக சம்பாதித்த சொத்து என்றெல்லாம் பாகுபாடு கிடையாது.

அல்லாஹ் மிக அறிந்தவன்

No comments:

Post a Comment