Saturday, May 24, 2014

மனைவி , மக்களும் விரோதிகளா ?

அல்லாஹ்வின் திருபெயரால் ...
எல்லாப் புகழும் புகழ்ச்சியும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாக !

மேலும் மனிதர்களின் நிலைமைகளைப்பற்றி அல்லாஹ் தனது திருமறையில்  ''ஈமான் கொண்ட விசுவாசிகளே! நிச்சயமாக உங்கள் மனைவிகளிலும் , உங்களுடைய பிள்ளைகளிலும் உங்களுக்கு விரோதிகளும் இருக்கின்றார்கள், ஆகவே , அவர்களைப் பற்றி நீங்கள் எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள்'' என்றும் மற்றொரு வசனத்தில்  ''உங்களுடைய செல்வங்களும் உங்களுடைய பிள்ளைகளும் [உங்களை] குழப்பத்தில் ஆழ்த்தக்கூடியவைகலாகும் '' என்றும் அல்லாஹ் கூறுகிறான்.


நபி [ஸல்] அவர்கள் ''நிச்சயமாக ஒவ்வொரு சமூகத்தினருக்கும் ஒரு குழப்பம் [தரும் காரியம்] இருக்கிறது , என்னுடைய சமூகத்தினருக்கு குழப்பம் [தரும் காரியம்] செல்வமாகும் என்றும் .                     [திர்மிதி]

மற்றொரு ஹதீஸில் , என்னுடைய காலத்துக்குப்பின் பெண்களால் ஏற்படும் சோதனைதான் ஆண்களுக்கு இடையூறுகளை [இன்னல்களை] தரக்கூடியதாக இருக்கும் என்றும் '' கூறியுள்ளார்கள்.                       [புகாரீ]

மேல்கூறப்பட்ட இறை வசனங்களும் ஹதீஸ்களும் , பொன்னும் பொருளும் பெண்ணும் மனிதர்களை எந்த நிலைமைக்கு ஆளாக்கிவிடுகின்றன, எனென்ன பாடுபடுத்துகின்றன என்பதை மிகத்தெளிவாக விளக்கி காட்டுகின்றன.

ஆம்! என்னதான் அன்பும் பாசமும் பொழிகின்ற உறவாக இருந்தாலும் சொத்துப் பிரச்சனை பாகபிரிவின்னை, கொடுக்கல் வாங்கல் மற்றும் பல காரணங்களால் மனஸ்தாபங்கள் ஏற்படவே செய்யும், அது அவர்களின் மனங்களில் விரோதமாகவும் குரோதமாகவும் வளரத் தொடங்கி நேரம் வரும்போது எரிமலையாக வெடித்துச் சிதறுவதை பார்க்கத்தானே செய்கிறோம்.

எனவே, பாகபிரிவினையின் போது  அண்ணன் தம்பிதானே , அக்காள் தங்கைதானே, தந்தை மகன் தானே , கணவன் மனைவி தானே என்று ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து அனுசரித்துப் போவதும் கூடக்குறைய பாகங்களை பகிர்ந்து கொள்வதும் வரவேற்கக் வேண்டிய விஷயம்தான் அதில் எந்த வித கருத்து வேறுபாடும் இல்லை .

ஆனால், பிற்காலத்திலோ , அல்லது அடுத்து தலைமுறையிலோ அப்பா அம்மா பாகம் என்று பிரச்சனைகள் ஏதும் ஏற்படாமல் இருக்க வேண்டுமானால் பாகபிரிவினை விபரங்கள் அனைத்தையும் எழுத்து மூலமாக பதிந்து விடவேண்டும்  . அதனைப் பற்றியும் அல்லாஹ் நமக்கு கற்றுத் தந்திருக்கிறான்.

ஆவணங்களை பதிந்து விடுங்கள்

''முஃமின்களே! நீங்கள் ஒரு குறிப்பிட்ட தவணை வரை கடன் கொடுக்கல் வாங்கல் செய்து கொண்டால் அதனை  எழுதி [பதிந்து] கொள்ளுங்கள், உங்களுக்கு மத்தியில்  [கடன்] விபரத்தை எழுதுகிறவர் நீதியுடன் எழுதட்டும், ......... மேலும் உங்களுடைய ஆண்களிலிருந்து நீதியுள்ள சாட்சியாளர்கள் இருவரை நீங்கள் சாட்சிகளாக ஆக்கிக்கொள்ளுங்கள்....மேலும், [கடன் தொகை] கொஞ்சமாக இருந்தாலும் அதனுடைய தவணை வரை [யாருடன்] அதை எழுதி கொள்வதற்கு சடையாதீர்கள்'' என்று அல்லாஹ் கூறுகிறான்.
அல்குர் ஆன்  2.282]

இந்த வசனம்  கடன் கொடுக்கல் வாங்கல் பற்றியதாக இருந்தாலும் , குறுகிய காலத்துக்கே எழுத்து மூலமாக  பதிய வேண்டும் என்று கூறும்போது, காலா காலத்துக்கும் தீர்வாக உள்ள பாகபிரிவினைக்கு சொல்லவே தேவையில்லை கண்டிப்பாக எழுத்து மூலமாகத்தான் எழுதப்பட வேண்டும் என்ற முக்கியமான கருத்தை நமக்கு மிகத் தெளிவாக  சுட்டிக்காட்டுகிறது.

எனவே  , மேல் கூறப்பட்டுள்ள மிக நுட்பமான விஷயங்களை நன்கு சிந்தித்து , உடன் பிறந்தவர்கள் தானே , உறவினர்கள் தானே, நம்பிக்கைக்குரியவர்கள் தானே ,  என்றெல்லாம் பார்க்ககூடாது. யாராயிருந்தாலும் சரி  கொடுக்கல் வாங்கல், பாகபிரிவினை மற்றும் முன் பணமாக தரக்கூடிய காரியங்கள் போன்ற அனைத்தையும் சிரமத்தை பாராமல் எழுத்து மூலமாக பதிந்து விடவேண்டும்  , அதற்கு தக்க சாட்சிகளையும் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் .

அவ்வாறு பதிந்துவிடுவது  தற்போதைக்கு மட்டுமல்ல , காலா காலத்துக்கும் பிற்காலத்தில் வரக்கூடிய சந்ததிகளுக்கிடையில் எவ்வித பிரச்சனையும் ஏற்படாமல் தடுபதற்க்கும்  சரியான வழியாகும். அல்லாஹ்  நம் அனைவருக்கும் அத்தகைய செயல் திறனையும் நற்பண்பையும் அறிவாற்றலையும் தந்தருள்வானாக  !

இன்ஷாஅல்லாஹ்  இன்னும் தொடரும் ..........
அல்லாஹ்  மிக அறிந்தவன்.

No comments:

Post a Comment