Saturday, May 31, 2014

மணமான பெண்களின் பாகம்

அல்லாஹ்வின் திருபெயரால்...
எல்லாப் புகழும் புகழ்ச்சியும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாக!


இஸ்லாமின் வாரிசுரிமை சட்டங்கள் தொடர்ச்சி..........

மணமான பெண்களின் பாகம் ..

பாகப்பிரிவினையின் போது , மணம்முடித்து கொடுக்கப்பட்ட பெண்களுக்கு நிறைய நகைகள் போடப்பட்டு விட்டது நிறைய செலவுகளும் செய்யப்பட்டு விட்டன , எனவே, அந்தப் பெண்களுக்கு எதோ ஓரளவு பணம் கொடுத்தால் போதும் என்ற எண்ணத்தின் தோராயமாக ஒரு தொகையை கொடுத்து விட்டு இது உன் பாகத்துக்கு சரியாகி விட்டது என்று கரி சிலர் கணக்கை முடித்துக் கொள்கிறார்கள் இதுவும் தவறாகும்.


திருமணத்தின்போது போடப்பட்ட நகைகளும் செய்த செலவுகளும் கணக்கில் எடுத்துக்கொள்ள முடியாது, அது முடிந்து போன விஷயம், எனவே இப்போது சட்டப்படி என்ன பாகம் வருகிறதோ அதைத்தான் அந்த பெண்ணுக்கு கொடுக்க வேண்டும்.

இன்னும் சிலர், இஸ்லாமிய சட்டம் என்ன கூறுகிறது என்பதையெல்லாம் பார்ப்பது கிடையாது. சட்டப்படி ஒரு பெண்ணுக்கு கொடுக்க வேண்டிய பாகம் 1-1/2 லட்சமாக இருந்தால் ஒரு லட்சத்தை கொடுத்து இது நம்முடைய வாப்பாவின் சொத்திலிருந்து உனக்கு சேர வேண்டிய பாகம் என்று  சொல்லி கணக்கை முடித்துக்கொள்கிறார்கள் இதுவும் தவறாகும்.

எனவே, இத்தகைய தவறுகள் நடக்காமல் தடுக்கப்பட வேண்டுமானால், ஒவ்வொருவரும் ஓரளவாவது வாரிசு உரிமை என்றால் என்ன? அதில் நிறைந்திருக்கும் நுட்பமான விஷயங்கள் என்ன என்பது பற்றி தெரிந்துகொள்வது மிக மிக அவசியமாகும்.

வாரிசுரிமை சட்டத்தில் பெண்களுக்கு பாதகமா?

இஸ்லாமிய சொத்துரிமை சட்டத்தில் ஆணுக்கு இரண்டு பங்கு, பெண்ணுக்கு ஒரு பங்கு என்று சட்டம் கூறுகிறது. சிலர் இதை வைத்து இஸ்லாத்தில் பெண்களுக்கு சரியான முறையில் சொத்துரிமை வழங்கப்படவில்லை என்று கருதுகின்றனர்.

இவர்களின் இந்த என்னத்துக்கு காரணம் பெண்களுக்கு ஒரு பங்கு என்று ஏன் இஸ்லாம் கூறுகிறது என்பதை சிந்த்திக்காததும் அவர்களுக்கு இந்த ஒரு வழியைத்தவிர  வேறு எந்தெந்த வழிகளில் வாரிசுரிமை வருகிறது எந்தெந்த விகிதாச்சாரத்தில் சொத்துக்கள் கிடைக்கின்றன என்பதையெல்லாம்  புரிந்து கொள்ளாததுமே காரணமாகும்,, புரிந்து கொள்வார்களானால் அந்த எண்ணம் தவறு என்பதை அறிந்து கொள்வார்கள்.

ஆண்களுக்கு  இரண்டு பங்கு, பெண்களுக்கு ஒரு பங்கு என்பது, பெண்கள் தம்முடைய சகோதரர்களுடன் இருக்கும்போது மட்டுமே உள்ள நிலையாகும், இது மட்டுமே  ஒரு பெண்ணுக்குரிய வாரிசுரிமை என்று எண்ணிவிடாதீர்கள், ஒரு பெண்  தன்னுடைய பெற்றோர், பிள்ளைகள், கணவன் சில நேரங்களில் சகோதரன்,சகோதரி, பாட்டன், பாட்டி ஆகிய அனைவருக்கும் வாரிசாக வரக்கூடியவளாகும் .

மேலும்  ஒரு பெண்ணுக்கு அவளுடன் இருக்கும் வாரிசுதாரர்களைப் பொறுத்து 3/4, 1/2, 1/4, 6ல் ஒன்று, 8ல் ஒன்று என்று பல விகிதாச்சாரங்களில் பாகங்கள் கிடைக்கின்றன. அவைகளின் விரிவான விளக்கங்கள் வாரிசுதார்ரர்களும் பாகங்களும் என்ற தலைப்பில் கூறப்படும். இப்போது ஆணுக்கு இரண்டு பெண்ணுக்கு ஒன்று என்பதற்குரிய காரணத்தை பார்ப்போம்.

பொதுவாக  பெண் என்பவள் திருமணம் ஆகும்வரை பெற்றோர்களின் பொறுப்பில் வாழக்கூடியவளாகும்  . திருமணத்திற்குப் பிறகு அவளுக்கு எல்லாமே கணவன்தான். கணவன் வீடுதான் அவளுடைய வீடு. அவளுடைய செயல்பாடுகள் அனைத்தும் கணவனை சார்ந்தவையாகவே மாறிவிடுகின்றன. இதுதான் பெண்களின் நிலை.

ஆண்பிள்ளைகளின் நிலை அதற்கு நேர் மாற்றமானதாகும். அவர்கள் வீட்டோடு இருந்து வீட்டையும் வீடு  சம்மந்தப்பட்ட அனைத்து வேலைகளையும் கவனிக்க வேண்டும். மேலும் தந்தையின் தொழில், வியாபாரம், கொடுக்கல், வாங்கல் போன்ற அணைத்து காரியங்களிலும் தந்தைக்கு உறுதுணையாக இருக்க வேண்டிய பொறுப்பும் ஆண்பிள்ளைகளையே சார்ந்ததாகும்.

அதுமட்டுமல்ல பெற்றோர்களை அவர்களின் கடைசி காலம் வரை பாதுகாக்கும் பொறுப்பும், அவர்களுக்கு வேண்டிய அனைத்து காரியங்களையும் செய்து தரவேண்டிய கடமையும், தேவைப்படும்போது நிர்பந்த சூழலில் சகோதரிகளை பராமரிக்கின்ற பொறுப்பும் ஆண்பிள்ளைகளையே சார்ந்ததாக இருக்கிறது.

இத்தகைய பொறுப்புகளை எல்லாம் ஆண்களின் மீதே சுமத்தப்பட்டிருப்பதால் அவர்களுக்கு இரண்டு பங்கு என்றும் இத்தகைய பொறுப்புக்கள் பெண்களின் மீது சுமத்தப்படவில்லை என்பதால் அவர்களுக்கு ஒரு பங்கு என்றும் ஷரீ அத் சட்டம் கூறுகிறது. இதுவரை கூறப்பட்ட விஷயங்களை நன்கு சிந்தித்து பாருங்கள் அந்த சட்டத்தின் தத்துவம் நன்கு தெளிவாகப் புரியும்.
அல்லாஹ் மிக அறிந்தவன்
இன்ஷாஅல்லாஹ் இன்னும் தொடரும்..........................................   

No comments:

Post a Comment